வாழ்க்கை

Image result for ராட்டினம் image

இழுத்து சுருட்டி விடப்பட்ட
ராட்டினத்திலிருந்து விடுப்பட்ட
கயிறுப் போல சடுதியில்
கடந்து விடுகிறது வாழ்க்கை….

-ராஜி

Advertisements

நான் நானாகி……

நான் முழுமையானவன் அல்ல….

நான் என்னும் அகந்தை உள்ளவன்..

நான் நானாகி இருப்பதன் விளைவே

நான் நானாகியே நிற்கிறேன்…

 

முடமாய் மனதளவிலும்

மூர்கமாய் நினைவிலும்..

நான் முழுமையானவன் இல்லை….

நீண்டுவிட்ட வாழ்க்கையில்

நெளிந்துக் கொண்டே

நாட்களை எண்ணிக் கொண்டு…

நான் முழுமையானவன் இல்லை….

 

வக்கிரங்களை விதைத்துக்கொண்டே

வழமைகளை பேசிக்கொண்டே…

நான் முழுனையானவன் இல்லை….

ஏனோ,

நான் நானாகி இருப்பதன் விளைவே

நான் நானாகியே நிற்கிறேன்

-ராஜி

நீ பருகும் எனதன்பு

 நீ பருகும் எனதன்பு

ஒரு கோப்பை தேனீர்…
இரு வதனங்கள் சுவைக்க..
இன்ப தேன் அது…

நிறம் மாறியது
சுவை மாறியது
திடம் மாறியது… அன்பே

உன் ரசணையும்
உன் அன்பும் மாறாமல்…
உன்னில் தொலைந்துக்கொண்டே
தொலைகிறேன் நான்…

ஒரு கோப்பை தேனீர் போல

     -ராஜி